திங்கள், 9 நவம்பர், 2015

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடைபெற்ற தீபாவளி கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள் விபரம்-2015




முதலாம் இடம் வந்த கவிதை

அரைநிர்வாணமாய் _தமிழும்.
அதிகாரவர்க்கமாய் சிங்களமும்.
புதிரான தலைக்கனங்களும்.
புத்தத்தின் விகாரையும்.
பௌத்தத்தின் கலசங்களும்.
அடிமைக்கு அரைவட்டக்கல்லும்.
ஆட்சிக்கு சிகிரியாக்குன்றும்.
அடிமையின் பச்சை இரத்தமாய்.
தேயிலைத்தோட்டமும்.
வறுமைக்காய் வசைபாடும் கிழிகளும்.
நீதி கேட்டு ஒழிந்துகிடக்கும்.
ஆறாவது நூறும்.
குருதி ஊற்றி மனிதம் கலந்த!
செம்மஞ்சளாய் ஜொலிக்கிறது
நாகதீவின் நூறு ரூபாய்.

கவிதையாக்கம்
 சொற்சிற்பிசபா.

----------------------------------------------------------------------------------


இரண்டாம் இடம் வந்த கவிதை


நூ()று ரூபாய் நோட்டு…!!!

மொழிகளின் பேதம் எதுவுமில்லை;
இல்லாத நாடுகள் எங்குமில்லை!
வார்த்தைக்கு இங்கு மதிப்பில்லை;
எண்ணம்மட்டும் மதிக்கப்பெறும்!
வியர்வையின் ஈரம் பார்த்ததுண்டு;
ரத்தத்தின் கோரம் சுவைத்ததுண்டு!
இதயங்களின் அருகில் இடமுண்டு;
()வனையும் ()மாற்ற திறமுண்டு!
எட்டாத உயரமென யாதுமில்லை;
இதனை விரும்பாது எவருமில்லை!
குழந்தையும் வீசும் குப்பைத்தொட்டி-
இதுவரை காண வாய்க்கவில்லை!
பிணமும் வாய் திறக்கச்செய்யும்-
பணம் - பத்தும்கூட செய்துவிடும்;
இப்பணம் - ‘நூ()றும் செய்யக்கூடும்!

கவிதையாக்கம்-
மாயவரத்தான்..எம்.ஜீ.ஆர்

-----------------------------------------------------------



மூன்றாம் இடம் வந்த கவிதை.

-----------------------------------------


சீயாய் நாணயம்
உற்று நோக்கினால் மட்டுமே
தெரியும் தமிழ்சொற்கள்
இரண்டு.

வடக்கு,கிழக்கில் வசிக்கும்
நம் தமிழினம் போன்று.

கிளிகள் காதல்மொழி பேசும்
தேன்கூடு தேசத்தில்
தேயிலை பறிக்கும்
தோழிகளுக்கு தெரியுமா?

தாய்நாட்டின் திசைநோக்கி
ஏங்கும்
அகதி வாழ்க்கை.

தொலைந்துபோன
புத்தனின் வாய்மொழி
பாதுகாப்பாய்...
பேழைக்குள்.

உறைந்துவிட்ட குருதி.
மலையக மக்களின்
வியர்வை சிந்திய செம்மண்.
சுற்றித்திரியும்
தவிட்டு்க்குருவி.

இவற்றுள்
எந்த நிறம்
இந்த சீயாய் நாணயம்?

கவிதையாக்கம்
திரு.இன்பா


முதலாம்.இரண்டாம். மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கான 

பதக்கம்+சான்றிதழ் அவர்களின் முகவரிக்கு வந்து கிடைக்கும். தபாலில்.


ஆறுதல் பரிசு பெற்றவர்கள் விபரம்.

+புதுவை பிரபா.
+கிரேஸ் பிரதீபா.
+J.NIRMALA.CHRSTIN
+பி.எம்.கமால் கடைய நல்லூர்

இவர்களுக்கான பரிசு தபாலில் வந்து சேரும்.. சான்றிதழ் மட்டும்.
வெற்றி பெற்ற போட்டியாளர்கள் தங்களின் சரியான முகவரியை ஊற்று மின்னஞ்சலுக்கு ootru2@gmail.comஅனுப்பும் மாறு தயவாக
வேண்டிக்கொள்கிறேன்.

நடுவராக கடமையாற்றிய..

கவிஞர் ரமணிஐயா.
திண்டுக்கல் தனபாலன் அண்ணா.
யாழ்பாவாணன் அண்ணா.
இவர்களுக்கு ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி
அன்புடன்
ஊற்று நிருவாக குழுவினர்.

26 கருத்துகள்:

  1. வெற்றி பெற்ற அனைவருக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா

      ஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

      நன்றி
      ஊற்று நிருவாக குழுவினர்

      நீக்கு
  2. வெற்றியாளர்களுக்கும் போட்டியில் பங்குபற்றியோருக்கும் ஊற்று உறுப்பினர்களுக்கும் ஊற்று விரும்பிகளுக்கும்
    இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
    நன்மை தரும் பொன்நாளாக அமைய
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். என்னை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர்ளுக்கு என் நன்றிகள் .ரவிஜி.

    பதிலளிநீக்கு
  4. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். என்னை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர்ளுக்கு என் நன்றிகள் .ரவிஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா

      ஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

      நன்றி
      ஊற்று நிருவாக குழுவினர்

      நீக்கு
  5. ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்றத்திற்க்கு என் நன்றிகள்.


    அன்புடன்,
    இன்பா

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா

      ஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

      நன்றி
      ஊற்று நிருவாக குழுவினர்

      நீக்கு
  7. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா

      ஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

      நன்றி
      ஊற்று நிருவாக குழுவினர்

      நீக்கு
  8. வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! ஆறுதல் பரிசிற்கு மகிழ்ச்சியுடன் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா

      ஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

      நன்றி
      ஊற்று நிருவாக குழுவினர்

      நீக்கு
  9. தாங்கள் நடத்திய தீபாவளி கவிதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது மகிழ்ச்சி. போட்டியை அறிவித்து நடத்திய ஊற்று வலையுலக மன்ற நண்பர்களுக்கும் நடுவர் குழுவிற்கும் மனமார்ந்த நன்றி. முதல் மூன்று பரிசுகளை வென்றோருக்கும் என்னோடு ஆறுதல் பரிசுகளை பகிர்ந்துகொண்ட தோழர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா

      ஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

      நன்றி
      ஊற்று நிருவாக குழுவினர்

      நீக்கு
  10. அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா

      ஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

      நன்றி
      ஊற்று நிருவாக குழுவினர்

      நீக்கு
  12. நடுவர் குழுவினருக்கும் ,பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா

      ஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

      நன்றி
      ஊற்று நிருவாக குழுவினர்

      நீக்கு
  13. நடுவர் குழுவினருக்கும் ,பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா

      ஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

      நன்றி
      ஊற்று நிருவாக குழுவினர்

      நீக்கு
  14. வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா

      ஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

      நன்றி
      ஊற்று நிருவாக குழுவினர்

      நீக்கு
  15. வெற்றி பெற்ற அனைவருக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் .ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடைபெற்ற தீபாவளி கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள் விபரம்-2015 கீழ் , ஆறுதல் பரிசு பெற்றவர்கள் விபரம் என்பதில்

    " +புதுவை பிரபா.
    +கிரேஸ் பிரதீபா.
    +J.NIRMALA.CHRSTIN
    +பி.எம்.கமால் கடைய நல்லூர்

    இவர்களுக்கான பரிசு தபாலில் வந்து சேரும்.. சான்றிதழ் மட்டும்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதுநாள் வரையில் எனக்கான சான்றிதழ் வந்து சேரவில்லை. தாங்கள் அனுப்பிவிட்டீர்களா? விவரம் தரவும் .

    அன்புடன்
    புதுவை பிரபா

    பதிலளிநீக்கு