செவ்வாய், 5 ஜனவரி, 2016

'ஊற்று' வலைப்பூப் பதிவுகளின் திரட்டியில் இணையுங்கள்!

பல வலைத் திரட்டிகள் செயலிழந்து வருகின்றன. சில வலைத் திரட்டிகள் ஏனோ தானோ எனச் செயற்படுகின்றன. சில வலைத் திரட்டிகள் தானியங்கிச் செயற்பாடின்றி, பதிவர்கள் புதிய பதிவுகளை இணைத்தால் இணைக்கின்றன. இவற்றிலிருந்து ஊற்று வலைப்பூப் பதிவுகளின் திரட்டி முற்றிலும் தானியங்கிச் செயலாகப் புதிய பதிவுகளை இணைத்து வேறுபடுகின்றது.

கூகிளின் Dynamic Feed Control Wizard ஐப் பயன்படுத்தி இத்தானியங்கித் திரட்டி உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் வலைப்பூவை ஒரு தடவை இணைத்துவிட்டால் போதும். நீங்கள் உங்கள் வலைப்பூவில் புதிய பதிவை பதிந்த பின்னர்; 'ஊற்று' திரட்டியைத் திறந்து பார்த்தால், உங்கள் புதிய பதிவு இணைக்கப்பட்டிருக்குமே!

'ஊற்று' திரட்டியில் நடுப் பகுதியின் மேல் பகுதியில் மாறும் திரையில் இணைக்கப்பட்ட பதிவுகளின் சுருக்கம் ஓடிக்கொண்டிருக்கும். அந்த மாறும் திரையிற்குக் கீழே உங்கள் வலைப்பூவின் பெயரும் இணைக்கப்பட்ட புதிய பதிவின் தலைப்பும் காணப்படும். எல்லாமே இங்கு எழுமாறாகப் (Randomize) பார்வையிட முடியும். அதாவது இணைக்கப்பட்ட ஒழுங்கின்றி எவரது பதிவும் நடுப் பகுதியின் மேல் பகுதியில் தோன்றும்.

அப்படியாயின், இவை உண்மையா பொய்யா என்றறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி 'ஊற்று' திரட்டியைத் திறந்து பாருங்கள். மாற்றங்களை இனம் காண மீள மீளத் திறந்து பாருங்கள்.
இதோ 'ஊற்று' திரட்டிக்கான இணைப்பு http://ootru.yarlsoft.com/

நீங்கள் 'ஊற்று' திரட்டியைப் பார்வையிட்டதும் எப்படி இணையலாம் என எண்ணியிருப்பீர்கள். அதற்கு வலைப்பூவின் பெயர், வலைப்பூவின் RSS Feed Url, வலைப்பூ தொடங்கிய ஆண்டு, ஆகியவற்றை ootru2@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் போதும். நாம் தானியங்கி முறையில் புதிய பதிவுகளைத் திரட்டி வெளியிடுவோம்.

உங்கள் வலைப்பூவிற்கான RSS Feed Url ஐக் கண்டுபிடிப்பது எப்படி?
கூகிள் பிளொக்கர் ஆயின்
உங்கள் வலைப்பூ முகவரியுடன் பின்னொட்டாக /feeds/posts/default என்பதைச் சேர்க்கவும்.
எடுத்துக்காட்டாக
http://www.ypvnpubs.com/feeds/posts/default
வேர்ட்பிரஸ் ஆயின்
உங்கள் வலைப்பூ முகவரியுடன் பின்னொட்டாக /?feed=rss என்பதைச் சேர்க்கவும்.
எடுத்துக்காட்டாக
https://mhcd7.wordpress.com/?feed=rss
மேற்படி உங்கள் வலைப்பூவிற்கான RSS Feed Url ஐக் கண்டுபிடித்தால்; கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிச் சரிபார்க்கலாம்.

தற்போது ஒரு பதிவர் ஒரு வலைப்பூவை மட்டும் இணைக்க வாய்ப்பு உண்டு. பின்னர் மற்றையதை இணைக்க வாய்ப்புத் தரப்படும். ஆயினும், மூன்று மாதங்களுக்கு மேல் பதிவுகள் இடப்படாத வலைப்பூக்களை அல்லது தமிழர் பண்பாட்டை மீறும் பதிவுகளை இடும் வலைப்பூக்களை இத்திரட்டியில் இருந்து நீக்கிவிட எமக்கு உரிமை உண்டு. இதனைத் தாங்களும் பயன்படுத்துவதோடு தங்கள் நண்பர்களையும் பயன்படுத்த அழையுங்கள்.


11 கருத்துகள்:

  1. வணக்கம்

    பதிவர்கள் யாவருக்கும் பயன்பெறும் திரட்டி தேடலுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்

    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. Error வருகிறது. இணைக்க இயலவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ootru2@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வலைப்பூவின் பெயர், வலைப்பூவின் RSS Feed Url, வலைப்பூ தொடங்கிய ஆண்டு ஆகியவற்றை அனுப்பினால் போதும். உங்கள் வலைப்பூவை நாமே இணைத்து விடுவோம்.
      நன்றி.

      நீக்கு
  4. இணைந்து விட்டேன் ,தொடரட்டும் உங்கள் சேவை :)

    பதிலளிநீக்கு
  5. வழிகாட்டுதல் படி மெயில் அனுப்பிவிட்டேன். தங்களின் தகவல் கண்டு...நன்றி!!!

    பதிலளிநீக்கு
  6. அன்பினும் இனிய அய்யா

    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
    இணையில்லாத இன்பத் திருநாளாம்
    "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  7. அன்புடையீர் வணக்கம். தங்களின் தமிழ்ச் சேவைகளைக் கண்டு மலேசியாவில் நாங்கள் வியப்பு அடைகிறோம். இங்கே மலேசியாவில் தமிழ் மொழிக்கான உரிமைகளைப் போராடிப் பெற்று வருகிறோம். உங்கள் சேவைகள் தொடர மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு